பிரதமரின் வார்த்தையை மீறமுடியவில்லை! ஒய்வு முடிவை திரும்பப் பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை வங்கதேச கேப்டன் தமிம் இக்பால் ரத்து செய்துள்ளார்.
ஒய்வு முடிவை திரும்பப் பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர் தமீம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றதாக அறிவித்தார்.
34 வயதான தமிம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தலைமை தாங்கினார், புதன்கிழமை இங்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷ் தோல்வியடைந்த ஒரு நாள் கழித்து வியாழக்கிழமை தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
Tamim Iqbal. Credit: Reuters
"என் தொழிலை முடித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.," என கூறி கண்கலங்கினார்.
மேலும், தன் மீது நம்பிக்கை வைத்திருந்த சக வீரர்கள், பயிற்சியாளர், பிசிபி அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வீரர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மனம் மாறிய தமீம்
ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) இயக்குனர் ஜலால் யூனுஸ், ஹசீனாவை அவரது டாக்கா இல்லத்தில் சந்தித்த பிறகு தமீம் மனம் மாறியதாக தெரிவித்தார்.
"தமிம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்" என்று யூனுஸ் கூறினார்.
Tamim Iqbal, Bangladesh PM [PC: BDcrictime.
பிரதமரின் வார்த்தையை மீறமுடியவில்லை!
"இன்று (வெள்ளிக்கிழமை) மதியம், பிரதமர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். அவர் எனக்கு அறிவுரை கூறி, மீண்டும் விளையாடச் சொன்னார், எனவே நான் இந்த நேரத்தில் ஓய்வு முடிவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன்," என்று தமீம் கூறியுள்ளார்.
"நான் எல்லோரிடமும் இல்லை என்று சொல்ல முடியும், ஆனால் பிரதமரின் அதிகாரத்தில் உள்ள ஒருவரின் வார்த்தைக்கு என்னால் இல்லை என்று சொல்ல முடியாது." என்று அவர் கூறினார்.
"பிரதமர் எனது சிகிச்சை மற்றும் பிற விஷயங்களுக்காக எனக்கு ஒன்றரை மாத இடைவெளி கொடுத்தார். மனதளவில் சுதந்திரமான பிறகு, மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவேன்." என்று தமீம் கூறியுள்ளார்.
Tamim Iqbal, Bangladesh PM-Instagram
பிப்ரவரி 2007-ல் பங்களாதேஷ் ஜெர்சியில் தமீம் அறிமுகமானார். பங்களாதேஷ் அணிக்காக அதிக ஒருநாள் ஓட்டங்கள் மற்றும் சதங்கள் அடித்தவர் தமிம். தமீம் 241 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் மற்றும் 8313 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |