கிர்ணி பழத்தில் பயங்கர நோய்க்கிருமிகள்: கனடாவில் 19 பேர் பாதிப்பு
கனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
கனடாவில் 19 பேருக்கு பாதிப்பு
அமெரிக்காவில் கிர்ணி பழத்தை உண்ட 43 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
எந்தெந்த தயாரிப்புகளில் பாதிப்பு?
கனடாவைப் பொருத்தவரை, Malichita, Save on Foods மற்றும் Urban Fare என்னும் மூன்று நிறுவனத் தயாரிப்புகளில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த நிறுவனத் தயாரிப்புகளை உண்ணவேண்டாம் என்றும் கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி எச்சரித்துள்ளது.
முழு பழங்கள், வெட்டி துண்டுகளாக விற்கப்படும் பழங்கள் மற்றும் புரூட் சாலடாக விற்கப்படும் தயாரிப்புகள் என மூன்று வகை உணவுகள் திரும்பப் பெறப்பட்டுவருகின்றன.
அக்டோபர் 11ஆம் திகதிக்கும் நவம்பர் 14ஆம் திகதிக்கும் இடையில் விற்கப்பட்ட பழங்களிலும், நவம்பர் 4ஆம் திகதி காலாவதி திகதி கொண்ட Save on Foods மற்றும் Urban Fare தயாரிப்புகளிலும்தான் பாதிப்பு உள்ளது.
கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 8 பேருக்கும், கியூபெக்கில் 8 பேருக்கும், ஒன்ராறியோவில் 3 பேருக்கும் கிர்ணி பழங்களை உண்டதால் சால்மோனெல்லா கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |