உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் டீ: எப்படி தயாரிப்பது?
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும் இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய்- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் பாகற்காயின் தோலை சீவி, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி பின் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும்.
இதனை மிதமான சூட்டில் 10 நிமிடம் கொதிக்க விடவும், இதனால் பாகற்காயின் எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும்.
பிறகு அடுப்பை அனைத்து இதனை அப்படியே வைத்து பின் ஒரு டம்ளரில் வடிகட்டவும்.
அடுத்து இனிப்பு சுவையிற்காக இதில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பருகலாம்.
இந்த டீயை தொடர்ந்து குடித்து வருவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.
மேலும், உடலின் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண்களுக்கு பலன் அளிக்கிறது மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |