நாவூறும் சுவையில் குடைமிளகாய் சட்னி.., எப்படி செய்வது?
குடைமிளகாயில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
மேலும், மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- பூண்டு- 4 பல்
- இஞ்சி- 1 துண்டு
- வெங்காயம்- 4
- பச்சை மிளகாய்- 2
- குடைமிளகாய்- 1
- புளி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- பெருங்காயத்தூள்- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின் அதில் பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதகக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதில் புளி, உப்பு, கொத்தமல்லி இலை, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் வாணல் வைத்து சூடானதும் எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |