விசாவுடன் வைப்புத்தொகை இல்லை: என் அம்மாவை அழைத்து வர முடியவில்லை - வோசின்ஹா
கேப் வேர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா தன் தாயாரை தன்னுடன் அழைத்து வரமுடியவில்லை என்ற விடயத்தை பகிர்ந்தார்.
முத்திரை பதித்த வோசின்ஹா
ஃபிபா உலகக்கிண்ணம் 2026 போட்டியில், ஸ்பெயின் அணிக்கு எதிராக 7 கோல் வாய்ப்புகளை தடுத்து ஹீரோவானர் கேப் வேர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா.
தனது அணியின் முதல் உலகக்கிண்ணப் போட்டியிலேயே முத்திரை பதித்த வோசின்ஹா (Vozinha) ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அத்துடன் போட்டியின்போதே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
வாழ்நாள் கனவு
அதாவது, சுமார் 50,000யில் இருந்த பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனாக அதிகரிக்க, உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
ஆனால், உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவான தருணத்தை, தனது தாயார் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய வோசின்ஹாவின் விருப்பம் நிறைவேறவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "விசா கட்டணத்துடன் 15,000 டொலர்கள் வைப்புத்தொகை கொடுக்க முடியாததால் என் வாழ்நாள் கனவான இந்த தருணத்தில், என் தாயாரை என்னுடன் அழைத்து வர முடியவில்லை. சிறுவயதில் என் தாத்தா பாட்டியுடனே வளர்ந்தேன். அவர்கள் இன்று என்னுடன் இல்லை என்றாலும், என் அம்மா இதை தொலைக்காட்சியில் கண்டு களித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |