உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத நாடு., இன்று உலகக்கோப்பையில் படைத்துவரும் வரலாறு
இதுவரை உலககோப்பைகளில் பெயரே அளிக்காத நாடு, 2 முறை உலகக்கோப்பை வென்ற நாட்டை எதிர்த்து விளையாடி போட்டியை ட்ரா செய்து அதிர்ச்சியளித்துள்ளது.
முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ள கேப் வெர்டே அணி, தனது இரண்டாவது போட்டியில் உருகுவேவை எதிர்த்து 2-2 என கோல் கணக்கில் சமன் செய்துள்ளது.

மியாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டி, கேப் வெர்டேவின் இரண்டாவது அதிர்ச்சியளிக்கும் ஆட்டமாக மாறியது.
21-வது நிமிடத்தில் கேவின் பினா அடித்த ஃபிரீ கிக், கேப் வெர்டேவின் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் கோலாக அமைந்தது.
ஆனால், முதல் பாதி முடிவதற்கு முன் உருகுவே இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. மேக்ஸி ஆரௌஜோ மற்றும் அகஸ்டின் கனோப்பியோ ஆகியோர் கோல் அடித்தனர்.
இரண்டாம் பாதியில், 40 வயதான உருகுவே கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லேரா செய்த தவறை பயன்படுத்தி, ஹெலியோ வரேலா கேப் வெர்டேவின் இரண்டாவது கோலை அடித்தார். இதனால், போட்டி 2-2 என முடிந்தது.
இந்த சமநிலை, கேப் வெர்டேவுக்கு குழு H-இல் இரண்டாவது புள்ளியை வழங்கியது. அடுத்த போட்டியில் சவுதி அரேபியாவை வென்றால், கேப் வெர்டே 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
Cabo Verde make history! 🇨🇻
— FIFA (@FIFAcom) June 21, 2026
They’ve scored their first-ever @FIFAWorldCup goal 👏 pic.twitter.com/2K1x9ay2Sw
மறுபுறம், இருமுறை உலகக் கோப்பை வென்ற உருகுவே, சவுதி அரேபியாவுடனும் கேப் வெர்டேவுடனும் சமநிலை பெற்றதால், அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஆபத்தில் உள்ளது. அணி, அடுத்த வாரம் ஸ்பெயினை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உருகுவே பயிற்சியாளர் மார்செலோ பியெல்சா, அணியில் சில மாற்றங்களை செய்திருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
கேப் வெர்டே பயிற்சியாளர் புபிஸ்டா, தாக்குதலில் மூன்று மாற்றங்களை செய்து, அணியை வலுப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |