விமானி எடுத்த அந்த முடிவு... ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிவரும் புதிய தகவல்
கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு விமானிகளுக்கு இடையேயான உரையாடலில், முதன்மை விமானியே விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை துண்டித்தார் என்ற கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் ஓட்டம்
வெளியான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று விமான இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இரண்டாவது விமானியிடம் இருந்துள்ளது.
இந்த நிலையிலேயே அவர் முதன்மை விமானியிடம் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை துண்டித்ததன் காரணம் குறித்து வினவுகிறார். மட்டுமின்றி, எரிபொருள் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் அவர் கோரிக்கை வைக்கிறார்.
விமானிகள் இருவரின் உரையாடல்களும் பதிவாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. மேலும், விசாரணை கட்டத்தில் இருப்பதால், உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
முதன்மை விமானியின் நடவடிக்கையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் AAIB, சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை உள்நோக்கத்துடன் வெளியிடுவதாக கண்டித்துள்ளது.
மீள முடியாமல்
மேலும், விமான விபத்து என்பது பல்வேறு காரணங்களால் நிகழக்கூடியது என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, ஓராண்டுக்குள் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றே AAIB தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்திய விமானம் 650 அடி உயரத்தில் மேலெழும்பியதும், கட்டுப்பாட்டை இழந்து கீழே நழுவியதாகவும், இரண்டு இயந்திரங்களின் எரிபொருள் ஓட்டமும் சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் விமானம் மிகவும் தாழ்வாகவும் மெதுவாகவும் இயங்கியதால் மீள முடியாமல் போனதாகவும் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |