தனுஷ் நடிக்கும் ''கேப்டன் மில்லர்'' படத்தின் உன் ஒளியிலே பாடல் வெளியானது (வீடியோ)
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "கேப்டன் மில்லர்". இப்படத்தின் உன் ஒளியிலே பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ''கேப்டன் மில்லர்'' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

மேலும் இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
''கேப்டன் மில்லர்'' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் 2-வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
Captain Miller second single https://t.co/Su7SRHqjRT pic.twitter.com/wsTjXsERbH
— Dhanush (@dhanushkraja) December 23, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |