கேப்டன் மில்லர் டீஸர் : 45 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள்!
நடிகர் தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், அவரது அதிரடி நடிப்பில் வெளியாகவிருக்கும் “கேப்டன் மில்லர்” டீஸரை வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வைத்துள்ளார்.
இவர் பல படங்களில் சடித்து வந்துள்ளார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி என்ற திரைப்படம் போதியளவு வெற்றியை பெற்று தராததால், அவர் மரியான் படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமாக நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றார்கள்.
“கேப்டன் மில்லர்”
இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் 2023 டிசம்பரில் வெளியாகவிருகின்றது.
தனுஷ் தவிர, மார்க் பென்னிங்டன், நாசர், சிவராஜ்குமார், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேப்டன் மில்லரில் தனுஷ் மொத்தம் மூன்று தோற்றங்களில் காணப்படுவார் என்று அருண் தெரிவித்துள்ளார். மேலும் 1930 களின் பின்னணியில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது." என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சமயத்தில் நடிகர் தனுஷ் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு டீசரை வெளியிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தை அடையவைத்துள்ளனர்.
“கேப்டன் மில்லர்” டீசர்
இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டீசர் வெளியான 45 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.
மேலும் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |