இந்தியா-நியூசிலாந்து மோதல்: ஓய்வு குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அரையிறுதியில் இந்திய அணி
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இதன் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் இந்த உலக கோப்பை தான் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு 36 வயதாகும் நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை மற்றும் அதற்கடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு தொடர்களுக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனம் திறந்த ரோகித் சர்மா
இந்நிலையில் தன்னுடைய ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்கள் உடனான சந்திப்பின் போது பதிலளித்துள்ளார்.
அதில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சிந்திப்பதற்கு இது சரியான தருணம் இது இல்லை, எனது ஓய்வு குறித்து உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்த பிறகு சிந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தின் முக்கியத்துவம் குறித்து நன்கு அறிவோம், நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். தனது மனநிலையை மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |