Flashback: விஜயகாந்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு.., ஆக்ஷனில் இறங்கிய கேப்டனின் உறவினர்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் தியாகு அளித்த தகவல்களை பார்க்கலாம்.
விஜயகாந்த் மறைவு
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் டிசம்பர் 11 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று இருந்தார். மருத்துவ பணியாளர்களின் முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை காலமானார்’’ என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.
வடிவேலுடன் மோதல்
இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் நினைவுகள் குறித்து பகிரப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக அவரது பெருந்தன்மையான குணம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜயகாந்துக்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் தியாகு சொன்ன தகவல்களை பார்க்கலாம்.
அவர் கூறுகையில், "நடிகர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு அவருக்கு குடை பிடித்து வருவார். அப்போது அவருக்கு சம்பளம் ரூ.250. இப்போது அவருக்கு வசதி வந்துவிட்டது. வடிவேலுவின் வீட்டிற்கு எதிர்வீட்டில் உள்ள விஜயகாந்தின் உறவினர் இறந்து விட்டார்.
அப்போது துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் வடிவேலு வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். வாகனத்தை எடுக்கும் படி வடிவேலு கூறியுள்ளார்.
சடலத்தை எடுத்தவுடன் கிளம்புவோம் என்று விஜயகாந்த் உறவினர்கள் கூறியுள்ளனர். அப்போது, விஜயகாந்தை பற்றி வடிவேலு எதையோ சொல்லிவிட, உறவினர்கள் வடிவேலை அடித்துவிட்டார்கள்.
இதேபோல, தேர்தலின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்பு விஜயகாந்தை வடிவேல் தரக்குறைவாக பேசியது பெரும் வேதனையை அளித்தது. அதோடு வடிவேலுவின் திரைப்பயணம் முடிந்தது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |