சாமியார் மீது இறங்கிய மறைந்த கேப்டன் விஜயகாந்த்.., அவர் கூறிய அருள்வாக்கு என்ன?
மறைந்த விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த சாமியாருக்குள் இறங்கிய கேப்டன் விஜயகாந்த் அருள்வாக்கு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்திற்கு அஞ்சலி
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவரது மறைவுக்கு பிரபலங்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாமியாருக்குள் இறங்கிய விஜயகாந்த்
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தனது கனவில் தோன்றி விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊத வேண்டும் எனக் கூறினார். அதனாலேயே தான் இங்கு வந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல், விஜயகாந்த் எங்கேயும் போகவில்லை, உங்களது மூத்த மகன் உருவில் இருக்கிறார் என்றும் கூறினார்.
பின்னர், விஜயகாந்த் குரலில் பேசிய சாமியார், என்னை பத்தி தெரியுமில்ல? ஏழை மக்களை விட்டுவிட்டு நான் எங்க போக போகிறேன். பிரேமா நான் உன் இருதயத்தில் தான் இருக்கிறேன் என்று கூறினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |