அவுஸ்திரேலிய ஏ அணியை புரட்டியெடுத்த யஸ்டிகா, அனுஷ்கா
India women A scored 338 runs vs Australia A: அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி 338 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா ஏ அணியின் கேப்டன் யஸ்டிகா பாட்டியா அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.
பிரியா, தனிஷா
இந்தியா ஏ மற்றும் அவுஸ்திரேலிய ஏ மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இந்திய அணியில் பிரியா புனியா 36 ஓட்டங்களும், தனிஷா சிங் 37 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணித்தலைவர் யஸ்டிகா பாட்டியா (Yastika Bhatia) அதிரடியில் மிரட்ட, தேஜல் ஹஸப்னிஸ் நிதானமாக ஓட்டங்களை சேர்த்தார்.
யஸ்டிகா சதம்
சதம் விளாசிய யஸ்டிகா, 84 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் தேஜல் 60 (66) ஓட்டங்களும், அனுஷ்கா ஷர்மா 60 (46) ஓட்டங்களும் விளாச இந்தியா ஏ அணி 338 ஓட்டங்கள் குவித்தது.
டார்சி 3 விக்கெட்டுகளும், மிலி இல்லிங்வோர்த் 2 விக்கெட்டுகளும், லில்லி மில்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.