ரஷ்யாவிடம் பிரித்தானியர்கள் சிக்கியது பிரித்தானியாவுக்கு பெரிய தலைவலி! முன்னாள் அதிகாரி தகவல்
ரஷ்ய படைகளிடம் இரண்டு பிரித்தானியா வீரர்கள் பிடிபட்டது பிரித்தானியாவுக்கு உண்மையில் கடினமான பிரச்சனை என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட Shaun Pinner, Aiden Aslin இருவர், இன்று ரஷ்ய அரசு டி.வி-யில் தோன்றினர்.
தங்களுக்கு ஈடாக உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி Viktor Medvedchuk-ஐ ரஷ்யாவிடம் கொடுத்து, தங்களை மீட்குமாறு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி Lord Ricketts கூறியதாவது, இது பிரித்தானியா அரசாங்கத்திற்கு உண்மையில் கடினமான பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் மற்றும் எதாவது பிரச்சனையில் சிக்கினால் அரசாங்கத்தால் எந்த உதவியும் செய்ய முடியாது என பிரித்தானியர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், வற்புறுத்தலின் கீழ் பிரித்தானியர்கள் பேசுவது போல் தெரிகிறது, Medvedchuk-ஐ விடுதலை செய்ய, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பிரத்தானிய அரசை அழுத்தம் கொடுக்க வைக்க இதை ஒரு வசதியான வாய்ப்பாக ரஷ்யா பயன்படுத்துகிறது.
கண்டிப்பாக இதுகுறித்து விவாதங்கள் தற்போது நடைப்பெற்று வருகின்றன, ஆனால், இறுதி முடிவு உக்ரேனிய ஜனாதிபதியிடம் தான் இருக்கிறது என Lord Ricketts தெரிவித்துள்ளார்.