பிரித்தானியாவில் ரயில்வே பாலத்தில் மோதிய கார்: மான்செஸ்டரில் ரயில் சேவை பாதிப்பு!
பிரித்தானியாவில் ரயில்வே பாலத்தின் மீது கார் ஒன்று மோதிய விபத்துக்கு பிறகு ரயில் போக்குவரத்து தாமதத்தை சந்தித்து வருகிறது.
ரயில் போக்குவரத்தில் தாமதம்
கிரேட்டர் மான்செஸ்டரில் கார் ஒன்று ரயில்வே பாலத்தின் மீது மோதி தண்டவாளத்தில் விழுந்ததால் , மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே பயணிக்கும் பயணிகள் ரயில் தாமதங்களையும் ரத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.
மான்செஸ்டர் ஈவினிங் நியூஸின் தகவல்படி, இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சால்ஃபோர்டில்(Salford) உள்ள ரீஜண்ட் சாலையில்(Regent Road) உள்ள ரவுண்டானா ஒன்றில் கார் மோதியதால் நிகழ்ந்துள்ளது.
இது மான்செஸ்டர் சிட்டி சென்டருக்கு அருகில் அமைந்துள்ளது.
சாரதி கைது
அதிகப்படியான மது அருந்தியிருந்ததற்காக சாரதி கைது செய்யப்பட்டதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் பொலிஸின் கூற்றுப்படி, ஓட்டுநர் மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
நியூட்டன்-லே-வில்லோஸ்(Newton-le-Willows) மற்றும் விகான் நார்த் வெஸ்டர்ன்(Wigan North Western) செல்லும் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |