ஸ்காட்லாந்து சாலையில் நடந்த பயங்கரம்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
ஸ்காட்லாந்தில் நடந்த சாலை விபத்தில் 3 டீன் ஏஜ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
3 டீன் ஏஜ் இளைஞர்கள் பலி
ஹைலேண்ட்ஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு 11.15 மணி அளவில் ஆரிசாக் பகுதியின் A830 சாலையில் நடந்த கார் விபத்தில் 3 டீன் ஏஜ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
போர்டு பியஸ்டா கார் விபத்துக்குள்ளானதில் இந்த துயர சம்பவமானது அரங்கேறியுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த காவல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
உயிரிழந்த இளைஞர்கள் பதின் பருவத்தை சேர்ந்த ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மூவரின் வயது மற்றும் அடையாளங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு பொலிஸார் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |