பிரான்சில் பொலிசாரிடம் சிக்கிய கார்: பின்னணியில் ஒரு பெரிய கதை
பிரான்சில் சுங்கச் சாவடி ஒன்றில் ஒரு கார் சிக்கிய நிலையில், அதன் பின்னணியில் ஒரு பெரிய கதை இருப்பது தெரியவந்துள்ளது.
அந்தக் காரில் இரண்டு சிறுவர்களை மூன்று ஆண்கள் கடத்திச் சென்றுகொண்டிருந்தார்கள்.
சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில், பிரான்சிலுள்ள Landes என்ற இடத்தில் சுங்கச் சாவடி ஒன்றில் ஒரு காரை பொலிசார் மடக்கினார்கள்.
அந்தக் காரைக் குறித்து சுவிஸ் பொலிசார் பிரான்ஸ் பொலிசாருக்கு ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தார்கள்.
அந்த காரில், இரண்டு சிறுவர்களை மூன்று ஆண்கள் கடத்திச் சென்றுகொண்டிருந்தார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள். அவர்களை யார் வளர்ப்பது என்பதில் அவர்களுடைய பெற்றோருக்கிடையே பிரச்சினை இருந்துள்ளது. அந்தப் பிள்ளைகளின் தந்தை ஸ்பெயினில் வாழ்கிறார். தாய், சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார்.
சுவிட்சர்லாந்தில் தங்கள் பாட்டி வீட்டிலிருந்த அந்த பிள்ளைகளை அவர்களுடைய தந்தை ஆட்களை வைத்து கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி மூன்றுபேர் அந்த பிள்ளைகள் இருந்த வீட்டுக்குச் சென்று அவர்களுடைய பாட்டியை கட்டிப்போட்டுவிட்டு, பிள்ளைகளைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.
தற்போது அந்த பிள்ளைகள் தாயிடமும் இல்லாமல், தந்தையிடமும் இல்லாமல் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களைக் கடத்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் பிரான்சில் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவக்கப்பட்டுள்ளது.