கனடாவில் பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்... 10 பெண்கள் காயம்: 8 வயது சிறுமி பலி
கனடாவில் செவ்வாயன்று நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் ஒன்று மோதிய சம்பவத்தில், 8 வயது சிறுமி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், செவ்வாயன்று இரவு நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது.
இந்த துயர சம்பவத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
மோசமாக காயமடைந்தவர்களில் 8 வயது சிறுமி ஒருத்தி தற்போது பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த காரை செலுத்தியது ஒரு 76 வயது பெண்மணி என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் இன்னமும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் செய்தித்தொடர்பாளரான Sandasha Bough தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 10 பேர் பெண்கள், அவர்களில் குழந்தைகளும் அடக்கம். அவர்கள் 6 முதல் 40 வயதுடையவர்கள் ஆவர்.
உயிரிழந்த சிறுமி குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
The news from London, Ontario breaks my heart. To the family and friends of the child who passed away, know that Canadians across the country are here for you. And to those who were injured, we’re wishing you all a fast and full recovery. We’ll be keeping you in our thoughts.
— Justin Trudeau (@JustinTrudeau) December 1, 2021
My heart breaks for the family of the little girl killed in last night’s collision near Wonderland and Riverside. This is beyond tragic. All Londoners share in this grief. Our thoughts also remain fixated on those still in hospital as we hope and pray for complete recoveries.
— Ed Holder (@ldnontmayor) December 1, 2021