பிரித்தானியாவின் கிராமத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்து: இரண்டு இளைஞர் உயிரிழப்பு
பிரித்தானியாவில் சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் இருவர் பலி
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் சஃபோக்(Suffolk) பகுதியில் லிட்டில் ஸ்டோன்ஹாம் கிராமத்தில் உள்ள டெபென்ஹாம் சாலையில் மிக மோசமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சில்வர் நிற வோக்வாகன் பாசாட்( silver Volkswagen Passat ) மற்றும் சிவப்பு நிற பியூஜியாட்(Peugeot) 107 ரக வாகனங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியிருந்தன.
சம்பவம் தொடர்பாக காலை 10.15 மணிக்கு பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

ஆரம்பக்கட்ட தகவல்படி, பியூஜியாட் காரில் பயணியாக சென்ற பதின்பருவ இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் அந்த காரை ஓட்டி வந்த பதின்பருவ பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்./// ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
வேக்ஸ்வாகன் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக சஃபோக் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளதோடு, விபத்து தொடர்பான வீடியோ ஆதாரங்கள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக நார்ஃபோக் மற்றும் சஃபோக் விபத்து விசாரணை பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.