பிரித்தானியாவில் மரத்தின் மீது மோதிய BMW கார்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 டீன் ஏஜ் இளைஞர்கள்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்து
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மார்ச்சம் கிராமத்தில் உள்ள A415 சாலையில் நள்ளிரவுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு வெள்ளி நிற BMW கார் ஒன்று சாலையை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரண்டு 18 வயதுடைய இளைஞர்கள் மற்றும் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Sky News
இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.
உயிருக்கு போராடும் சாரதி
இந்த விபத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்த 18 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
London News Pictures
இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
sky news