பிரான்சிலிருந்து அயர்லாந்துக்குள் நுழைந்த கார்: காரை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...
பிரான்சிலிருந்து அயர்லாந்துக்குள் நுழைந்த ஒருவருடைய காரை பொலிசார் சோதனையிட்டனர்.
பொலிசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி
அயர்லாந்திலுள்ள Rosslare என்னும் துறைமுகத்தில், சுங்க அதிகாரிகள் வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, 30 வயதுகளிலிருந்த ஒருவருடைய காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர்.
GETTY IMAGES
சோதனையில், பிரான்சிலுள்ள Cherbourg என்ற இடத்தைச் சேர்ந்த அந்த நபரின் காருக்குள் கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த போதைப்பொருளின் மதிப்பு 2.4 மில்லியன் யூரோக்களாகும்.
உடனடியாக அந்த நபரைக் கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.