பாரிசின் 500 வீதிகளில் தடை விதிக்க வாக்கெடுப்பு: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
பிரான்ஸ் தலைநகரில் கார் இல்லாத மண்டலத்தை உருவாக்க வாக்களிப்பு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
10 மணிநேர வாக்கெடுப்புகள்
தலைநகர் பாரிஸில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, கார் இல்லாத மண்டலத்தை உருவாக்குவதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க பாரிஸ் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்த திட்டத்திற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்தால், நகரம் முழுவதும் 500 வீதிகள் பசுமையாக்கப்பட்டு பாதசாரி மண்டலங்களாக மாற்றப்படும்.
இதன்மூலம் 10,000 பார்க்கிங் இடங்கள் இழக்கப்படும். அதே வேளையில் சாரதிகள் மாற்றுப்பாதைகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 10 மணிநேர வாக்கெடுப்புகள் தொடங்கும். இதில் நகரத்தின் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும்.
220 வீதிகள்
முதல் முறையாக இந்த வாக்கெடுப்பில் 16 மற்றும் 17 வயதுடையவர்களும் பங்கேற்க முடியும், மாலையில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பாரிஸில் 6,000க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அவற்றில் சுமார் 220 வீதிகள் ஏற்கனவே கார்கள் இல்லாதவையாகும்.
சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக பாடசாலைகளுக்கு அருகில் கார்கள் ஓட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |