பிரித்தானியாவில் நகர மையத்தில் பலர் பாதிப்பு: ஒருவர் கைது..என்ன நடந்தது?
இங்கிலாந்தில் கார் மோதிய விபத்தில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பலர் பாதிப்பு
டெர்பி நகரின் Friar Gate பகுதியில், சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் கார் ஒன்று பலர் மீது மோதியுள்ளது.
நகர மையத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். உடனே மருத்துவக்குழு அங்கு விரைய, சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர்கள் பலருக்கு சிகிச்சை அளித்தனர்.
டெர்பிஷிரே பொலிஸார் விசாரணை
முதலுதவிக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரினை சிறுது நேரத்திலேயே பொலிஸார் இடைமறித்தனர்.
பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் சாரதியை கைது செய்து தங்களது காவலில் எடுத்தனர். டெர்பிஷிரே பொலிஸார் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |