கொழும்பில் மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்: 6 பேர் வரை உயிரிழப்பு: தப்பியோடிய சாரதி
இலங்கையின் கொழும்பு நகரில் ஏற்பட்ட பயங்கர சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த கார்
கொழும்பின் மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்குள் கார் ஒன்று புகுந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியது.
இதில் அங்கிருந்த 3 பெண் மற்றும் 3 ஆண் என 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் ஹோமகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய சாரதி
ஹோமகம - மீகோட பகுதியில் உள்ள சாலையில் அமைந்துள்ள கோவிலில் பொதுமக்கள் வரிசையாக கூடியிருந்த போது அடையாளம் தெரியாத நபர் வாடகை காரை பொதுமக்கள் மீது இடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும் தற்போது விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |