பிரித்தானியாவில் பாதசாரிகள் மீது கார் மொதவிட்டு தாக்குதல்: இரவில் நடந்த சம்பவம்
பிரித்தானியாவில் டெர்பி நகர மையத்தில் பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த
சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி சுமார் 21:30 மணியளவில் ஃபிரையர் கேட் பகுதியில், கருப்பு நிற சுசுகி ஸ்விஃப்ட் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதாக டெர்பிஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர், ஆனால் உயிர் அபாயம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில், இந்தியாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், உள்நோக்கத்துடன் கொடிய உடல் காயத்தை விளைவித்தல் மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்சன் தெரு/சீப்சைட் சந்திப்பிலிருந்து ஃபோர்டு தெரு வரை ஃபிரையர் கேட் மூடப்பட்டுள்ளது, மேலும் அப்பகுதியை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு வளையம் அகற்றப்பட்டு, சாலை மீண்டும் திறக்கப்படும் வரை ஃபிரையர் கேட்டில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை நகர்த்த முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |