அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த துயர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்..உடல்கள் மீட்பு
அவுஸ்திரேலியாவின் லொறி மோதிய சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
மெல்போர்னில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில், Eurambeen-Streatham மற்றும் Mount William சாலைகளின் சந்திப்பில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அப்போது லொறி, கார் மோதியது தெரிய வந்தது. இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.
விசாரணையில் இறந்தவர்கள் 41 வயது நபர், 31 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தை என தெரிய வந்தது. மேலும், விபத்தில் சிக்கிய மற்றொரு பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதால், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
247 பேர்
இதற்கிடையில் லொறி சாரதி லேசான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
பொலிஸார் இந்த விபத்து குறித்து கூறும்போது, கார் நிறுத்த அடையாளத்தை மீறிச் சென்று லொறியுடன் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் மூவர் பலியாகினர் என்றனர்.
விக்டோரியா காவல்துறையின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 18 குழந்தைகள் உட்பட 247 பேர் சாலைகளில் உயிரிழந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |