பள்ளி குழந்தைகள் மீது ஏறிய கார்! பிரித்தானியாவில் சற்றுமுன் நடந்த பயங்கரம்
பிரித்தானியாவில் பள்ளி அருகே நின்றுகொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
இங்கிலாந்தின் சசெக்ஸ் கவுன்டியில், Ardingly பகுதியில் உள்ள கலோரி சாலையில் உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர், அதில் ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் சவுத் ஈஸ்ட் கோஸ்ட் ஆம்புலன்ஸ் சேவையின் (SECAMB) விமான ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் 4 குழந்தைகள் காருக்கு அடியில் சிக்கி லேசான காயங்களுடன் ஆர்டிங்லி கல்லூரியில் சிகிச்சை பெற்றதாக உள்ளூர் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியது ஆட்டோ டிரைவிங் மோட் உள்ள 'டெஸ்லா' வாகனம் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் சசெக்ஸ் தெரிவித்துள்ளனர்.
