2024 ஜனவரி முதல் அதிகரிக்கும் கார்களின் விலை: பென்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் அறிவிப்பு
இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயரும் கார்களின் விலை
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கார்களின் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது விற்பனை மற்றும் தயாரிப்பு ஆலைகளை நிறுவி தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அடுத்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Audi pre-owned car showroom in Mumbai
அந்த வகையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது காரின் விலைகளை 2% முதல் 3% வரை அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் காரணமாக கார்களின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IANS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Benz, Tata, Honda, Audi, Maruti, cars, car price increases