தசரா ஊர்வலத்தில் நடந்த பயங்கரம்... அதிவேகத்தில் மக்கள் மீது மோதி தூக்கி வீசிய கார்: அதிர வைக்கும் வீடியோ
இந்தியாவில் தசரா ஊர்வலத்தில் கார் ஒன்று அதிவேகத்தில் மக்கள் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் ஊர்வலமாக சென்றுக்கொண்டிருந்த மக்கள் மீது மோதி தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கார் மோதியதில் ஒரு உயிரிழந்ததாகவும், சுமார் 20 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
Scary Visuals from Jashpur, Chhattisgarh. A speedy #SUV rams into people during #Dussehra celebrations.
— ? Sarwar ? (@ferozwala) October 15, 2021
Several injured, reports are awaited.#Jashpur #Chhattisgarh #India #BreakingNews pic.twitter.com/13o0x0ckGE
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
This is the vehicle which ran over at least 25 people in Chhattisgarh, during Durga Visarjan.
— Tanushree Pandey (@TanushreePande) October 15, 2021
As per locals and eye-witnesses, the Yellow packets found inside the car have contraband items inside them. Police yet to confirm. @ThePrintIndia https://t.co/TK1OqT7o5b pic.twitter.com/KOnkliPM5i
கார் மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளான காருக்குளிருந்து போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.