மின்னல் வேகத்தில் வந்த கார்: பல அடி தூரத்திற்கு தூக்கிவீசப்பட்ட பெண்..அதிர்ச்சி வீடியோ!
கார் மோதிய விபத்து கணவர் பலி, மனைவி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்
திருமணத்திற்கு சென்று திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் கேரளாவில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண்ணொருவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ பதிவுகள் அதிர்ச்சி அளித்துள்ளது.
கேரள மாநிலம் கருக்குப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் திருமணத்திற்கு சென்றுவிட்டு தனது மனைவி ருக்கியாவுடன் மலப்புரம் அருகே குட்டிப்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக எதிரே வந்த கார் ஒன்று அப்துல் காதரின் வாகனம் மீது மோதியது. இதில் அப்துல் காதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவரது மனைவி ருக்கியா பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொலிசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Malappuram: Horrifying accident kills one; visuals show pillion rider being flung from scooter in Malappuram #kerala #accident #latestnews pic.twitter.com/1cT0lvECUo
— Mathrubhumi English (@mathrubhumieng) August 21, 2022