தித்திக்கும் கேரமல் இளநீர் பாயசம்: எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
இதுவரைக்கும் நாம் பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டிருப்போம்.
அந்தவகையில், தற்போது சுவையான கேரமல் இளநீர் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 1 கப்
- பால்- 1 லிட்டர்
- ஜவ்வரிசி- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- இளநீர்- 1
- பாதம் பிசின்- 10
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து கேரமல் போல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து பால் பாதியளவு குறையும் வரை நன்கு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்த ஜவ்வரிசியை கொதிக்கின்ற பாலில் சேர்த்து பின் அதில் கேரமல் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸிஜாரில் இளநீரில் உள்ள தேங்காய் மற்றும் இளநீர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் அரைத்த இளநீர், கொதிக்கின்ற பால் அனைத்தையும் சேர்த்து இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்தால் கேரமல் இளநீர் பாயசம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |