இனிப்பு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த கேரமல் சேமியா பாயாசம் செய்வது எப்படி?
பாயாசம் இந்தியா முழுவதும் பண்டிகை நாட்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு ஆகும்.
இதை வெவ்வேறு பொருட்கள் கலந்து வெவ்வேறு சுவைகளில் செய்வார்கள். ஆனால் கேரமல் பாயாசம் கூடுதல் சுவையை கொடுக்கும். அதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
- சேமியா - 1 கப்
- சர்க்கரை - 1 கப்
- நெய்
- முந்திரி பருப்பு
- காய்ந்த திராட்சை
- தண்ணீர் - 1 கப்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் சிறிதளவு எடுத்து வைக்கவும்.
2. கேரமல் சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
3. சர்க்கரை கரைந்து பிரவுன் நிறமாக மாறியதும் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
4. ஒரு பானில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
5. ஒரு அகல கடாயில் நெய் சேர்த்து சேமியாவை மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
6. பின்பு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிடவும். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்த பாலை ஊற்றி கலந்து விடவும்.
7. சேமியா முழுதாக வெந்ததும் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
8. அடுத்து ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்தால், சுவையான பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |