தித்திக்கும் சுவையில் கேரமல் சேமியா பாயாசம்.., செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கேரமல் சேமியா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 லிட்டர்
- சர்க்கரை- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- உலர் திராட்சை- 10
- சேமியா- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து கரைத்து கேரமல் தயாரித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அந்த கேரமலில் காயவைத்த பால் பாதி சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதனுடன் மீதமுள்ள காயவைய்த்த பால் சேர்த்து சேமியாவை வேகவைக்கவும்.
நன்கு கொதித்து வந்ததும் அதிக கேரமலில் கரைத்த வைத்த பால் சேர்த்து கலந்து கொதிக்கவைக்கவும்.
பாயாசம் நன்கு கெட்டியாகி வந்ததும் அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் சுவையான கேரமல் சேமியா பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |