பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் தீ விபத்து: 10 வயது சிறுமி உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு
பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரவன் தங்கும் பகுதியில் தீ விபத்து
பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரை நகரமான ஸ்கெக்னெஸ் அருகே உள்ள கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக லிங்கன்ஷயர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கால்ட்மெல்ஸ் (Ingoldmells) கிராமத்தில் உள்ள கோல்டன் பீச் ஹாலிடே பார்க்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தீ விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டறிந்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் 10 வயது சிறுமி மற்றும் 48 வயது நபர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த பயங்கரமான தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று கண்டறியும் பணியில் புலனாய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |