பிரித்தானிய சாலையில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்: கதறும் குடும்பம்
கார்டிஃப் சாலையில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில், அவரது குடும்பத்தினர் பெருமையுடன் விவரித்துள்ளனர்.
அன்புக்குரிய மகள்
வியாழக்கிழமை பகல் கார்டிஃப் சாலையில் 32 வயதான நிரோதா என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். படுகாயமடைந்த நிலையிலேயே அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிரோதா அன்புக்குரிய மகள் என்றும் அன்பு தோழி என்றும், அவரது குடும்பத்தினர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். ரிவர்சைடில் உள்ள சவுத் மோர்கன் பிளேஸில் காலை 7.37 மணிக்கு அவசர உதவி துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
ஆனால் தீவிரமாக போராடியும், நிரோதாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், நிரோதாவிற்கு அறிமுகமான 37 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு கோரிக்கை
நிரோதாவின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினர் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். நிரோதாவை ஒரு அன்பான மகளாகவும், குடும்ப உறுப்பினராகவும், பலரின் அன்பான தோழியாகவும் நாங்கள் நினைவில் கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நிரோதா என்றென்றும் அமைதி, அன்பு மற்றும் நன்றியுடன் நினைவுகூரப்படுவார் எனவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்த அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வாகனத்தில் பதிவான காணொளி காட்சிகள் உள்ளிட்ட பதிவுகளையும் விசாரணை அதிகாரிகளுக்கு தந்துதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |