பிரித்தானியாவில் கணவன் இறந்த அறையில் கிடைத்த துண்டுச்சீட்டு: அது வெளிக்கொணர்ந்துள்ள பிரம்மாண்ட ஊழல்
முதியோர் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இறந்துபோன நிலையில், அவரது அறையிலுள்ள சோஃபாவில் ஒரு துண்டுச்சீட்டு கிடப்பதை கவனித்துள்ளார் அவரது மனைவி.
Lanarkshireஐச் சேர்ந்த Sonya Brown (51) என்னும் அந்த பெண்மணி அந்த துண்டுச் சீட்டு என்ன என பார்க்கும்போது, அவரை அதிர்ச்சியடைய வைத்த ஒரு தகவல் அதில் இருந்தது.
அது துண்டுச் சீட்டு அல்ல, அது ஒரு ஆவணம்! அதன் பெயர் Do Not Attempt CPR (DNACPR) ஆவணம்... அதாவது, இந்த ஆவணம் எந்த நோயாளியின் படுக்கையில் இருக்கிறதோ, அவர் திடீரென இதயத்துடிப்போ மூச்சுத்திணறலோ ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தால், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையான CPR கொடுக்கவேண்டாம் என்பதைக் கூறும் ஒரு ஆவணம் அது.
உண்மையில், அப்படி ஒரு ஆவணத்தை மருத்துவர் கொடுக்கவேண்டுமானால், அந்த நோயாளி அல்லது அவர்களது உறவினர்களின் ஒப்புதலின் பேரில்தான் அதைக் கொடுக்கவேண்டும். ஆனால், Sonya அதற்கு ஒப்புதல் அளித்திருக்கவில்லை!
Sonyaவின் கணவர் இறந்துபோனபின்பு, ஒருவேளை Do Not Attempt CPR ஆவணம் அளிக்கப்படாமல் இருந்திருந்தால், தன் கணவர் இன்னமும் உயிருடன் இருந்திருப்பாரோ என்ற எண்ணம் தனக்கு வந்ததாக தெரிவிக்கிறார் Sonya.
பொது நல ஆர்வம் கொண்ட ஆய்வு நிறுவனம் ஒன்று இது குறித்து ஆய்வு ஒன்ற மேற்கொண்டுள்ளது. 2,048 முதியோர் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், 508 பேருக்கு அவர்கள் சம்மதம் இல்லாமலே Do Not Attempt CPR ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் பிரிவு 2இன் படி இது விதி மீறல் என்பதால், பிரச்சினை பெரிதாக வெடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


