கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஸ்மித்..இந்திய அணிக்கு 265 ரன் இலக்கு வைத்த அவுஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணி 264 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டீவன் ஸ்மித் அரைசதம்
துபாயில் நடந்து வரும் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
கோனொலி டக்அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 39 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் லபுஷேன் 29 ஓட்டங்களிலும், இங்கிலிஸ் 11 ஓட்டங்களிலும் வெளியேற, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் விளாசினார்.
அணியின் ஸ்கோர் 198 ஆக உயர்ந்த நிலையில், ஸ்மித் 73 (96) ஓட்டங்களில் ஷமி பந்துவீச்சில் கிளீன்போல்டு ஆனார்.
அலெக்ஸ் கேரி அதிரடி
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அலெக்ஸ் கேரி அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவர் 57 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷமி 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |