ஸ்பைடர்மேனாக கேட்ச் செய்த கேரி! மிரண்டுபோய் வெளியேறிய இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி மிரட்டலாக கேட்ச் செய்து மிரள வைத்தார்.
பிலிப் சால்ட் அதிரடி
சாம்பியன்ஸ் டிராஃபியின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தெரிவு செய்ய, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என கடைசி இரண்டு பந்துகளில் அடித்து மிரட்டினார்.
அலெக்ஸ் கேரி கேட்ச்
பெரிய ஸ்கோரை அவர் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் இருந்த அலெக்ஸ் கேரி அவருக்கு செக் வைத்தார்.
ட்வர்ஷுய்ஸ் வீசிய ஓவரின் 4வது பந்தை சால்ட் விரட்ட, மிட் ஆனில் இருந்த அலெக்ஸ் கேரி (Alex Carey) அந்தரத்தில் பறந்து ஒற்றைக் கையால் ஸ்பைடர்மேன் போல் கேட்ச் செய்தார்.
இதனால் 10 (6) ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிலிப் சால்ட் (Philip Salt) மிரண்டுபோய் வெளியேறினார்.
Spectacular! ✈️#AUSvENG #ChampionsTrophy pic.twitter.com/Kv9P5oqAkM
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |