அமெரிக்கா-கனடா வர்த்தக பதற்றம்: Buy Canadian கொள்கையை அறிவித்த கார்னி
கனேடிய மக்கள் Buy Canadian கொள்கையை பின்பற்றுமாறு பிரதமர் மார்க் கார்னி கெண்டுகொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டால், அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 100 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, “Buy Canadian” என்ற புதிய கொள்கையை அறிவித்து, நாட்டின் மக்கள் தங்கள் உழைப்பால் சம்பாதித்த பணத்தை கனேடிய தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக செலவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
'Buy Canadian' கொள்கை மூலம் வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய திட்டங்களில் கனடிய பொருட்கள், தொழில்நுட்பம், தொழிலாளர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.

சீனாவுடன் ஒப்பந்தம்
கனடிய வேளாண் பொருட்களுக்கு சீனா சுங்கவரியை குறைத்துள்ளது. அதேபோல், கனடாவில் சீன மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் சீனாவின் முதலீடு அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ட்ரம்ப், “சீனா கனடாவை விழுங்கிவிடும்” என குற்றஞ்சாட்டி, கனடா-அமெரிக்க உறவை மேலும் பதற்றப்படுத்தியுள்ளார்.
இந்த வர்த்தக மோதல், உலகளாவிய பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கனடா தனது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா-சீனா-கனடா இடையிலான உறவுகள் உலக வர்த்தக சமநிலையை மாற்றக்கூடும்.
“Buy Canadian, Build Canadian” என்ற கார்னியின் கோஷம், கனடாவின் பொருளாதார சுயநிறைவை வலியுறுத்தும் முக்கிய அரசியல் செய்தியாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mark Carney Trump tariff news, Canada US trade tensions 2026, Buy Canadian policy explained, Trump 100 percent tariff threat, Canada China trade agreement, US Canada economic relations, Canadian PM Mark Carney speech, Canada vs US trade war latest, Canadian economy protection plan, Trump Canada trade dispute update