ட்ரம்பை கேலி செய்த கனடா பிரதமர்? வைரல் வீடியோ
மலேசியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றிற்காக மலேசியா சென்றுள்ள கனடா பிரதமர், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை கேலி செய்வதாக கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ட்ரம்பை கேலி செய்த கனடா பிரதமர்?
கனடாவின் ஒன்ராறியோ மாகாண பிரீமியரான Doug Ford வெளியிட்ட ஒரு பிரச்சார வீடியோவால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதை பலரும் அறிந்திருக்கலாம்.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் நடைபெறும் ASEAN உச்சி மாநாட்டில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford குறித்து பேசும்போது ஒரு சுவாரஸ்ய விடயம் நடைபெற்றது.
தனது உரையின்போது, Doug Fordஐ, 'a good friend' என குறிப்பிட்டார் கார்னி. அதாவது, ட்ரம்ப், மற்ற உலகத் தலைவர்களை அப்படித்தான் அழைப்பார்.
BROMANCE: Mark Carney is now calling Doug Ford “President” and bragging they’re best friends.
— Marc Nixon (@MarcNixon24) October 26, 2025
You can’t make this up
Doug Ford DESTROYED Canada’s trade with the U.S.
And now Carney is praising him pic.twitter.com/xQbrWChiLy
அத்துடன், பிரீமியரான Doug Fordஐ ஜனாதிபதி என குறிப்பிட்ட கார்னி, மன்னிக்கவும், எப்போதுமே நான் பிரீமியரையும் ஜனாதிபதியையும் குழப்பிக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
விடயம் என்னவென்றால், சமீபத்தில் கார்னியை ஜனாதிபதி என அழைத்தார் ட்ரம்ப். அதை கார்னி சுட்டிக்காட்ட, நல்லவேளை, உங்களை கவர்னர் என அழைக்காமல் விட்டேனே, அதற்காக சந்தோஷப்படுங்கள் என கேலியும் செய்தார் ட்ரம்ப்.
இந்நிலையில், ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை கேலி செய்வதற்காகவே கார்னி Doug Fordஐ 'a good friend' என்றும், ஜனாதிபதி என்றும் அழைத்தார் என்று இணையத்தில் செய்தி பரவ, அவர் பேசும் வீடியோ வைரலாகிவருகிறது.
ட்ரம்ப் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் கனடாவின் கவர்னர் என அழைத்து வெறுப்பேற்றியது நினைவிருக்கலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |