இரண்டாவது முறை பிரித்தானியாவுக்கு வர ட்ரம்புக்கு அழைப்பு: கனேடியர்கள் வருத்தம்
இரண்டாவது முறை அரசு முறைப்பயணமாக பிரித்தானியாவுக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிரித்தானிய மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், அது கனேடிய மக்களுக்குப் பிடிக்கவில்லை என கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனேடியர்களுக்கு பிடிக்கவில்லை
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.
கனடாவோ பிரித்தானிய மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு நாடு.
இப்படி ஒரு சூழலில், கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் ட்ரம்புக்கு பிரித்தானியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் கனேடியர்களுக்குப் பிடிக்கவில்லை என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ட்ரம்பின் மிரட்டல் குறித்து மன்னர் சார்லசோ பிரித்தானிய தரப்போ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கோபம் கனேடியர்களுக்கு உள்ளது.
இந்நிலையில், தங்களை ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டாவது முறையாக பிரித்தானியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் கனேடியர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |