அமெரிக்காவுடனான பொருளாதார உறவு முடிந்தது... கனடா பிரதமர்
பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது என்று கூறியுள்ளார் கனடா பிரதமர்.
பிற நாடுகளுக்கு கூடுதல் ஏற்றுமதி
கனடா பிரதமரான மார்க் கார்னி, நேற்று புதன்கிழமை, Ottawa பல்கலை மாணவ மாணவியரிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது என்று கூறினார்.
அத்துடன், அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் உள் நாட்டு முதலீடும் உள் கட்டமைப்பும் வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார் மார்க் கார்னி.
பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்ததன் விளைவாக, அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்ததால் நமது வலிமை என கருதப்பட்ட பல விடயங்கள் இப்போது நமது பலவீனங்களாக மாறிவிட்டன என்றும் அவர் கூறினார்.
மேலும், உண்மையாகக் கூறினால், அடுத்த சில மாதங்களுக்குள் எளிதாக நமது பொருளாதாரத்தை நம்மால் மாற்றிவிட முடியாது. அதற்கு கொஞ்சம் காலமும் பிடிக்கும், அத்துடன், கனேடியர்கள் அதற்காக சில தியாகங்களையும் செய்யவேண்டியிருக்கும் என்றார் மார்க் கார்னி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |