கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரே ஒரு ஹேர்பேக் போதும்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் முடி வளர்ச்சியை இந்த ஹேர்பேக் போதும் ஒன்று போதும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 2
- வாழைப்பழம் - 1
- தயிர் - 3 ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.
பின் வாழைப்பழத்தை உரித்து, அதே மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இதன் பிறகு இந்த கலவையில் தயிர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
அவ்வளவுதான் இந்த கேரட்மாஸ்கை தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இதன் பிறகு தலைமுடியை மென்மையான ஷாம்பூ கொண்டு நன்றாக கழுவவும்.
வாரம் ஒருமுறை இந்த கேரட் மாஸ்க் பயன்படுத்தி வந்தால் தலைமுடி பளபளப்பாகவும் வலுவாகவும் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |