குழந்தைகள் விரும்பி உண்ணும் கேரட் பான்கேக்.., எப்படி செய்வது?
தற்போது குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.
அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான கேரட் பான்கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால் - 1 கப்
- கேரட் - 1 கப்
- இலவங்கப்பட்டை - சிறிதளவு
- பேரீட்சம்பழம் - 5
- கோதுமை மாவு - 1 கப்
- உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் பாலை எடுத்து அதனுடன் துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அடுத்து இதனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து நன்கு கலந்து பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் இவற்றை மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
சூடு ஆறியதும் இலவங்கப்பட்டையை தனியாக எடுத்துவிட்டு கேரட் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் கோதுமை மாவு, உப்பு மற்றும் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக தோசைக் கல்லை சூடாக்கி மாவை சிறிது சிறிதாக ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கேரட் பான் கேக் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |