Carrot Payasam: எச்சில் ஊறும் சுவையில் கேரட் பாயசம்: ரெசிபி இதோ
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
இதுவரைக்கும் நாம் பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டிருப்போம்.
தற்போது சுவையான கேரட் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 லிட்டர்
- ஜவ்வரிசி- ½ கப்
- முந்திரி- 20
- நெய்- 2 ஸ்பூன்
- கேரட்- 3
- சர்க்கரை- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து பாதியளவு குறையும் வரை கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வேறொரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு 10 போல முந்திரி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் துருவிய கேரட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின் இதில் சர்க்கரை சேர்த்து கரைந்து வந்ததும் இதில் கொதிக்கவைத்த பால் சேர்த்து கிளறவும்.
பால் நன்கு கொதித்து வந்ததும் இதில் வேகவைத்த ஜவ்வரிசி, அரைத்த முந்திரி சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக நன்கு கொதித்து வந்ததும் இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரட் பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |