ரூ.39 லட்சம் மதிப்புடைய கார்கள் திருட்டு: கூகுளின் இந்த App மூலம் மீட்பு
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் இரண்டு கார்களும் திருடப்பட்ட நிலையில், கூகுள் செயலி மூலம் ஒரு கார் மீட்கப்பட்டது.
கார்கள் திருட்டு
இங்கிலாந்து பர்மிங்காவைச் சேர்ந்தவர் ஜே ராபின்சன் (23). இவர் ஒக்டோபர் 27 -ம் திகதி காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி வாசலுக்கு வந்துள்ளார். அப்போது தான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய சீட் ஸ்போர்ட் கார் மற்றும் போக்ஸ்வேகன் கோஃல்ப் மாடல் ஆகிய இரண்டு கார்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது, வீட்டிற்குள் புகுந்து சாவியை எடுத்து மர்மநபர்கள் திருடியுள்ளனர்.
கூகுள் செயலி
இதனைத்தொடர்ந்து, காரை திருடிய நபர்கள் 2000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம்) கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஜே ராபின்சன் நண்பரான ஜேமி என்பவர் ஸ்னாப்சாட் தளத்தில் சீட் மாடல் காரின் புகைப்படத்தை பார்த்துள்ளார். இந்த விவகாரத்தில், காவல்துறை மீது இவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால், இளைஞர்களே களமிறங்கினர்.
அந்த புகைப்படத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டடங்களின் புகைப்படத்தை, தேடும் செயலி வழியாக கட்டடத்தின் இருப்பிடத்தை ஜேமி கண்டறிந்தார். மேலும், கட்டடத்தின் அருகே இருந்த குப்பை தொட்டியில் பொறிக்கப்பட்டிருந்த வீட்டு தோட்டத்தின் இடத்தையும் கண்டுபிடித்தார்.
இதன் பிறகு, தெருவை கண்டறிவதற்கு கூகுள் எர்த் செயலி (Google Earth) உதவியாக இருந்துள்ளது. இந்த செயலி மூலம் வரைபடத்தை நாம் செயற்கைகோள் படங்களாக பார்க்கலாம். இதனைத்தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த கார் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட காரின் விலை 23000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 23,00,000) ஆகும். மற்றொரு மீட்கப்படாத காரின் விலை ரூ.16 லட்சம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |