சிக்ஸர் அடித்து வெற்றி: நியூஸிலாந்தை அலறவிட்ட மேற்கிந்திய தீவுகள்..சம்பவம் செய்த இருவர்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேர்ல் மிட்செல் 65 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது.
267 to defend in Georgetown.
— BLACKCAPS (@BLACKCAPS) July 11, 2026
Daryl Mitchell (65) and Will Young (49) lead the way with the bat.
Watch LIVE in NZ on ESPN on Sky and ESPN on Disney+#WINvNZ | 📸 Getty pic.twitter.com/udVHrGwjVt
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 267 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டேர்ல் மிட்செல் 65 (73) ஓட்டங்களும், வில் யங் 49 ஓட்டங்களும் எடுத்தனர். அல்ஸாரி ஜோஸப் 4 விக்கெட்டுகளும், விட்டல் லவ்ஸ் 3 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேசி கார்ட்டி (Keacy Carty) மற்றும் ஷாய் ஹோப் (Shai Hope) இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
சதத்தை நோக்கி பயணித்த கார்ட்டி 95 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் 87 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
49வது ஓவரில் ரூதர்போர்டு சிக்ஸர் விளாச, மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |