கனடாவில் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர் கார் மோதிக் கொல்லப்பட்ட வழக்கு: குற்றம் செய்யவில்லை என மறுப்பு
கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் பலி
கனடாவில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.
Submitted by the Afzaal family
வேன் மோதியதில், சல்மான், அவரது மனைவி மதீஹா, தம்பதியரின் மகள் யும்னா மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
தம்பதியரின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், பின் உயிர் பிழைத்துக்கொண்டான். இந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஆகும்.
Kate Dubinski/CBC
கனடாவை அதிரவைத்த சம்பவம்
சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனை வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.
Kate Dubinski/CBC
நத்தானியேல் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் செய்யவில்லை என மறுப்பு
நத்தானியேல் மீதான வழக்கு விசாரணை நேற்று துவங்கியுள்ளது. நத்தானியேல் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்ட நிலையில், தான் குற்றம் செய்யவில்லை என அவர் கூறுவதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Sketch by Lauren Foster-MacLeod
வழக்கு விசாரணை மூன்று மாதங்கள் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்தானியேல் மீது தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனை வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும், இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |