சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மீது வழக்குப்பதிவு! வெளியான காரணம்
எம்.எஸ் தோனி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயார்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி நியூ குளோபல் புரொடியூஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால் உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை என தெரிகிறது. இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதம் இருந்த உரங்களை திரும்ப பெற்றுள்ளது.
ஆனால் அதற்க்குபதிலாக ரூ.30 லட்சம் காசோலையை வழங்கியுள்ளது. இந்நிலையில் காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது அது செல்லுபடியாகவில்லை. இதுதொடர்பாக நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியநிலையில் அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.
இதன் வழக்கில் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உட்பட 8 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தால் இந்த வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை 28ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.