பிரித்தானிய குடும்பத்துக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: வழக்கில் முக்கிய திருப்பம்

United Kingdom Bangladesh
By Balamanuvelan Aug 04, 2022 06:45 AM GMT
Report

பங்களாதேஷ் நாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்களான ஒரு தந்தையும் மகனும் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.

பிரித்தானிய குடும்பத்துக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Case Of Alleged Poisoning

image - RUNNER MEDIA/BBC 

Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். ஆனால் Rafiqul மற்றும் அவரது மகனான Mahiqul ஆகிய இருவரின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனையில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், Rafiqulஉடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் மகனான Sadiqul (24) ஆகியோர் நேற்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

தற்போது அவர்கள் தெரிவித்துள்ள ஒரு தகவல், வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய குடும்பத்துக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Case Of Alleged Poisoning

image - bbc

ஆம், Rafiqul குடும்பத்தினர் தங்கியிருந்த குடியிருப்பில், மின்சாரம் தடைபட்டால் பயன்படுத்துவதற்காக ஒரு பழைய ஜெனரேட்டர் இருந்துள்ளது. சம்பவ தினத்திற்கு முந்தைய இரவு Rafiqul குடும்பத்தினர் தூங்கும்போது மின்சாரம் தடைபட்டதாகவும், அப்போது அந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டதாகவும் Husnaraவும் Sadiqulம் தெரிவித்துள்ளனர்.

அதை உறுதி செய்வதற்காக, வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் அதிகாரியான Supt Farid Uddin அந்த குடியிருப்புக்குச் சென்றுள்ளார். தான் அந்த ஜெனரேட்டரை இயக்கிப்பார்க்கும்போது அது பயங்கரமாக புகையைக் கக்கியதாக தெரிவித்துள்ள அவர், அந்த புகை மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, அந்த புகையால் மூச்சுத்திணறி, கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக Rafiqulம் அவரது மகனும் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.

புகை மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதே புகையிலுள்ள ரசாயனம், உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பிய Rafiqul குடும்பத்தினர் உடலிலும் உள்ளதா என்பதை அறிவதற்கான ஆய்வு தற்போது துவக்கப்பட்டுள்ளது.  

பிரித்தானிய குடும்பத்துக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Case Of Alleged Poisoning

image - bbc

மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US